உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போட் ஹவுசில் குவிந்த சுற்றுலா பயணியர்

போட் ஹவுசில் குவிந்த சுற்றுலா பயணியர்

செய்யூர்:செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளி பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' உள்ளது.விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். பின், படகுகளில் சவாரி செய்து, கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து பொழுது போக்கினர்.இங்கு, எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு, டிஸ்கோ நீர் விளையாட்டு என, பல வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.பெரும்பாலானோர் குடும்பத்தினருடன் வருவதால், எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகில் செல்ல ஆர்வம் காட்டினர். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 'டிஸ்கோ' படகில் பயணம் செய்தனர்.சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, நேற்று 400க்கும் மேற்ப்பட்ட சுற்றுலா பயணியர், போட் - ஹவுசிற்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை