உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார வளாகம் இல்லாமல் வியாபாரிகள் அவதி

சுகாதார வளாகம் இல்லாமல் வியாபாரிகள் அவதி

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் பகுதியில் வட்டாரவளர்ச்சி அலுவலகம்,காவல் நிலையம்,வேளாண் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது.மேலும் 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. பிரதிவாரம் புதன்கிழமை அன்று வார சந்தை நடக்கிறது.பொதுமக்கள் அடர்த்தியாக வசித்து வரும் பவுஞ்சூர் பஜார் பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பவுஞ்சூர் பஜார் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை