உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேன் உரிமையாளரை தாக்கிய இருவர் கைது

வேன் உரிமையாளரை தாக்கிய இருவர் கைது

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 32. சொந்தமாக 'மகேந்திரா டூரிஸ்டர்' வேனை, மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வேனுக்கு பெயின்ட் அடித்து, மறைமலை நகர் டென்சி பகுதியில் ஜி.எஸ்.டி., சாலையோரம் நிறுத்தி வைத்தார்.அப்போது அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த இரண்டு நபர்கள், வேனின் மீது சாய்ந்ததால், பெயின்ட் அழிந்து உள்ளது. இதனால், பார்த்திபன் அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதில் கோபமடைந்த அவர்கள் இருவரும், கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து, பார்த்திபன் தலையில் அடித்துள்ளனர்.உடனே, அங்கிருந்தோர் மேற்கண்ட இருவரையும் மடக்கி பிடித்து, மறைமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.பார்த்திபனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.போலீசார் விசாரணையில் அவர்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார், 22, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, 25, என தெரிந்தது.இருவரும் மறைமலை நகர் பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ