உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் திருட முயன்ற இருவர் கைது

பைக் திருட முயன்ற இருவர் கைது

மறைமலை நகர்:செங்கல்பட்டு நகராட்சி,கோகுலபுரம் ராஜேஸ்வரி 2வது தெருவில் செங்கல்பட்டு நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது தெருவின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யமஹா இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜன், 24. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின்,19. என்பது தெரிய வந்தது. இருவரும் செங்கை புறநகர் பகுதிகளில் தனியாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிந்தது.இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை