கஞ்சா கடத்திய இருவர் செங்கல்பட்டில் கைது
செங்கல்பட்டு:சென்னை, அம்பத்துார் அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்,47, இவரது பெண் தோழியான சென்னை கொளத்துார் ரெட்டேரியை சேர்ந்த லட்சுமி,50, ஆகியோர் மீது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.செங்கல்பட்டு போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இளங்கோவன் செங்கல்பட்டு பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் வைத்து, இளங்கோவன் மற்றும் லட்சுமியை கைது செய்தனர். அவர்களை சோதனை செய்த போது, 4 கிலோ கஞ்சா சிக்கியது.கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.