உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டு இளைஞர் கொலை வழக்கில் இருவர் கைது

புதுப்பட்டு இளைஞர் கொலை வழக்கில் இருவர் கைது

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமம், மலைமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ், 28. இரு நாட்களுக்கு முன், மதுராந்தகம் - உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பட்டு பயணியர் நிழற்குடை அருகே, படுகொலை செய்யப்பட்டார்.கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மலைமேட்டு தெருவைச் சேர்ந்த அப்பு என்ற உதயா பிரகாஷ், 27, திவாகர், 26, ஆகியோர் தலைமறைவாகினர்.மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடினர்.இந்நிலையில் நேற்று, இ.சி.ஆர்., சாலை கூவத்துார் பகுதியில் பதுங்கியிருந்த உதயா பிரகாஷ், திவாகர் ஆகியோரை, மதுராந்தகம் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:புதுப்பட்டு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட லோகேஷ், கைதான உதயா பிரகாஷ், திவாகர் ஆகியோர், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த உறவினர்கள்.இவர்களுக்குள், அவ்வப்போது சிறிய அளவிலான சண்டை இருந்து வந்துள்ளது.சம்பவத்தன்று மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த லோகேஷை, உதயா பிரகாஷ் மற்றும் திவாகர் ஆகியோர் இரும்பு ராடால் தாக்கியும், மரம் வெட்ட பயன்படுத்தும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ