உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் இருபெரும் விழா

திருப்போரூரில் இருபெரும் விழா

திருப்போரூர்:திருப்போரூரில், அருட்பிரகாச வள்ளலார் நற்பணி மன்றம், கவிமுரசு பாரதி பேரவை, ஜெ.எஸ்.ஆர்., குரூப் ஆப் நிறுவனம் சார்பில், வள்ளலார் மற்றும் காந்திபிறந்த நாள் விழா, இருபெரும் விழா நேற்று நடந்தது. விழாவில், ஜெ.எஸ்.ஆர்., குரூப் ஆப் நிறுவனர் மணி தலைமை வகித்தார். கவிஞர் உதயா ஆதிமூலம் வரவேற்றார். ஆசிரியர் குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில்,'வள்ளலார் கண்ட வாழ்வியல் நெறி மற்றும் காந்தியெனும் யுகங்களின் நாயகன்' எனும் தலைப்பில் செந்தில்குமார், திருக்குறள் தாத்தா பழனி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டியும், 1,330 திருக்குறள் முற்றோதலும் நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிறைவில், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி