உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நீர்நிலைகளில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டைபெரியபாளையத்தை அடுத்த, கொசவன்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51; நேற்று முன்தினம் மதியம் முதல் இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் பலி

சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. நேற்று முன்தினம் மதியம், குடும்பத்துடன் மாளந்துார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். மாலையில் இருந்து, இவரது மகன் ஜனார்த்தனத்தை, 15, காணவில்லை. அருகில் உள்ள ஆரணி ஆற்றிற்கு சென்றதாக சிலர் கூறினர். அங்கு சென்று பார்த்தபோது, ஆற்றில் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இரு சம்பவங்கள் குறித்தும், பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ