மேலும் செய்திகள்
செங்கல்பட்டில் பாம்பு கடித்து 9 வயது சிறுமி பலி
27-Oct-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் மஹாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா சாலமன், 33. கடந்த செப்., 19ம் தேதி இரவு வீட்டு வாசலில் தனது யமஹா ஆர்., 15 பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து, ராஜா சாலமன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த அபினேஷ், 18, அவரது நண்பரான 17 வயது சிறுவன் ஒருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் இருவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
27-Oct-2024