மேலும் செய்திகள்
அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி
10-Apr-2025
மேல்மருவத்துார், வந்தவாசி அடுத்த ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டியப்பன், 43.இவர், நேற்று முன்தினம், அவருக்குச் சொந்தமான,'ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் ப்ளஸ்' இருசக்கர வாகனத்தை, மேல்மருவத்துாரில் சாலையோரம் நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார்.பின், வேலை முடிந்து வந்து பார்த்த போது, வாகனம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, இருசக்கர வாகனத்தை திருடியவர் குறித்து விசாரிக்கின்றனர்.
10-Apr-2025