மேலும் செய்திகள்
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு 'காப்பு'
13-Oct-2025
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், கண்ணம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 23. இவர், கடந்த செப்., 9ம் தேதி இரவு, தன் இருசக்கர வாகனத்தை, வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சக்திவேல், சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சோழிங்கநல்லுார் இ.சி.ஆர்., சாலையில், சக்திவேலின் இருசக்கர வாகனம் அடிக்கடி சென்று வருவதை, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாத், 32, அவரது நண்பரான கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், 24, ஆகியோர், வாகனத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பிரசாத், கார்த்திகேயன் இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
13-Oct-2025
05-Oct-2025