புதிய மேல்நிலை தேக்கத்தொட்டி உடல்காரக்குப்பத்தினர் கோரிக்கை
பவுஞ்சூர், பவுஞ்சூர் அடுத்த நெடுமரம் ஊராட்சிக்கு உட்பட்டது உடல்காரக்குப்பம் கிராமம். இங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது.குடிநீர் தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை தேக்கத்தொட்டி, முறையான பராமரிப்பு இல்லாமல், துாண்கள் விரிசல் அடைந்து காணப்படுவதால், தொடர்ந்து மேல்நிலை தேக்கத்தொட்டியில் தண்ணீர் நிரப்பினால், இடிந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உடல்காரக்குப்பத்தில் புதிய மேல்நிலை தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.