உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அரசு மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

 அரசு மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, ச மூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில், அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு, கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், குழந்தைகள் - கர்ப்பிணியர் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு, மருத்துவமனை வளாகத்தில், சுகாதாரமான குடிநீர் வ ழங்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகத்தி டம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ