உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பனையூரில் பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பனையூரில் பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

செய்யூர்:சென்னை -- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கடலோர பகுதிகளின் முக்கிய போக்குவரத்து வழித்தடம், இதன் வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினசரி இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி, என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து, 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.சாலை விரிவாக்கத்திற்காக பல்வேறு இடங்களில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 10 மாதங்களாக நடந்து வருகிறது. கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை 7 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளதால், கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் குறுகிய சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி