உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு

செங்கல்பட்டு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணிகளுக்கு, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்த அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள 10 பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விபரங்கள், விண்ணப்பம் மற்றும் இதர தகவல்கள், https://chengalpattu.dcourts.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதிக்குள், மாலை 5:00 மணிக்குள், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், மாவட்ட நீதிமன்ற வளாகம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், நேர்முகத் தேர்வு வரும் அக்., 17ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை