உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் தாம்பரத்தில் 50 நாட்கள் நடக்கிறது

தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் தாம்பரத்தில் 50 நாட்கள் நடக்கிறது

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், சிட்லப்பாக்கத்தில் துவங்கியது. இம்முகாம் தொடர்ந்து, 50 நாட்கள் நடத்தப்பட உள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 45,000 தெரு நாய்கள் மற்றும் 5,000 வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம், சிட்லப்பாக்கத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து, 50 நாட்கள் நடத்தப் படுகிறது. வார்டு வாரியாக, முக்கிய தெருக்களில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக, மொத்தமுள்ள ஐந்து மண்டலங்களில், தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், இரு கால்நடை மருத்துவர்கள், இரு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், இரு வாகன ஓட்டுநர்கள் மற்றும் நாய் பிடிக்கும் பயிற்சி பெற்ற ஐந்து பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு குழுவும், தினம் 100 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளில், 532 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் நாளான இன்றும், சிட்லப்பாக்கத்திலேயே தடுப்பூசி போடப்படுகிறது. அதனால் அப்பகுதிமக்கள், தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை, அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்து சென்று, தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ