உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

செய்யூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் 15 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, 'மகேந்திரா மேக்ஸி கேப்' வேன், செய்யூரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்றது. பூதுார் கிராமத்தைச் சேர்ந்த சரத், 40, என்பவர் ஓட்டினார்.செய்யூர் அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்தில், ஓட்டுனரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், சித்தாற்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை, 32, மஞ்சுளா, 30, மற்றும் பூதுார் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ