தைப்பூசம் நாளில் வண்டலுார் பூங்கா இயங்கும்
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு வாரத்தில் செவ்வாய் கிழமை விடுமுறை. அன்று, விலங்குகளை பார்வையிட அனுமதி இல்லை; பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.இந்நிலையில், வரும் 11ம் தேதி, வார விடுமுறை நாளான செவ்வாய் கிழமை அன்று, தைப்பூசத்தை முன்னிட்டு, பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலுார் பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.