மேலும் செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை
12-Sep-2024
கூடுவாஞ்சேரி, :வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ், ஏரியின் அருகில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகில், பார் வசதியும் உள்ளது.அங்கு, மது பாட்டில்களை பதுக்கி வைத்து, காலை 8:00 மணி முதல் விற்பனை துவங்கிவிடுகின்றனர். விதிமீறி விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் ஒன்றுக்கு, 100 ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:வண்டலுார் மேம்பாலத்தின் கீழ் ஏரிக்கரையில் செயல்படும் டாஸ்மாக்கில், கடையில் பணிபுரியும் ஊழியர்களே ஒருவரை நியமித்து, காலையிலேயே கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்கின்றனர்.சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், லாரி ஓட்டுனர்கள் மேம்பாலத்தில் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.மேலும், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவற்றில் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்திற்கு முன்பே, விதிமீறி மதுபாட்டில் விற்போர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.
12-Sep-2024