உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாராய வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்

சாராய வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர், மதுவிலக்கு வழக்குகளில் 26 வகையான வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். கடந்தாண்டு, ஆக., 9ம் தேதி, பொது ஏலம் விடப்பட்டதில், 23 வாகனங்களை ஏலம் எடுக்க, யாரும் முன்வரவில்லை. இதனால், தற்போது மொத்தமுள்ள 49 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் அருகில், ஐ.டி.ஐ., மைதானத்தில் வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு, பொது ஏலம் விடப்பட்ட உள்ளன.ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், வரும் 28ம் தேதி முதல் 29ம் தேதி மாலை 5:00 மணி வரை, நுழைவு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்தி, ரசீது பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை