உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சகதியான வெடால் சாலை கிராமத்தினர் கடும் அவதி

சகதியான வெடால் சாலை கிராமத்தினர் கடும் அவதி

செய்யூர்:வெடால் ஊராட்சியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாலை பழுதடைந்து, சகதியாக மாறியுள்ளதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.செய்யூர் அருகே வெடால் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு சாலை சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.இதனால், கோடை காலத்தில் சாலையில் புழுதி பறக்கிறது. மழைக் காலத்தில் சாலை சகதியாக மாறிவிடுவதால், சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை