உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் ஏழு சட்டசபை தொகுதிக்கு வாக்காளர் உதவி மையங்கள் அமைப்பு

செங்கையில் ஏழு சட்டசபை தொகுதிக்கு வாக்காளர் உதவி மையங்கள் அமைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியில், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது. டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிச., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியில் உள்ள, 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கி வருகின்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அவரவர் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு சென்று படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து, வாக்காளர்கள் தெரிந்து கொள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி