மேலும் செய்திகள்
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
10-Oct-2025
திருப்போரூர்: திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஹிந்துஸ்தான் நிகர் நிலை பல்கலை நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இந்திய தேர்தல் கமிஷன் இணைந்து, ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் வலியுறுத்தும் நோக்கில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இப்பேரணியை, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரியா, திருப்போரூர் தாசில்தார் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், பல்கலை டீன் சாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Oct-2025