உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை

 மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை

சித்தாமூர்:மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் சாலை சந்திப்பு, பள்ளி பகுதி உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, எச்சரிக்கை பலகை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 38 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது. சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர், முதுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தினசரி சாலையில் இருசக்கர வாகனம், கார், தனியார் மற்றும் அரசு பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் சாலை சந்திப்புகளில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலையிலிருந்து, ஒன்றிய சாலை பிரிந்து செல்லும் சாலை சந்திப்புகள், பள்ளி பகுதிகளில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது, விபத்து எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்ட எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை