உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி துவக்கம்

வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி துவக்கம்

செங்கல்பட்டு-செங்கல்பட்டு மாவட்டத்தில், வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச்சரகங்களில், 42,650 ஏக்கர் பரப்பளவில், வனப்பகுதி உள்ளது. இங்கு மான், மயில், முயல், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன.இவற்றின் தாகம் தீர்க்க வனப்பகுதியில், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து, கோடைக்காலத்தில், நீர்த்தேக்க தொட்டிகளில் டிராக்டர் வாயிலாக, தினமும் தண்ணீர் நிரப்பி வருவது வழக்கம்.தற்போது, வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனவிலங்குகள் வெளியே வரும் சூழல் உள்ளது. இதை தவிர்க்க, நீர்த்தேக்க தொட்டிகளில், டிராக்டர் வாயிலாக தண்ணீர் நிரப்பும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி