மேலும் செய்திகள்
ஆதிபராசக்தி கல்லுாரியில் புத்தக வெளியீட்டு விழா
13-Aug-2025
* செங்கல்பட்டு செங்கல்பட்டு, மலையடி வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், சுதந்திர தின விழாவையொட்டி, நேற்று காலை 9:05 மணிக்கு, கலெக்டர் சினேகா தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 73 பயனாளிகளுக்கு 75.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதிஹெலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், இந்தியா - பாகிஸ்தான் போர் நினைவுச்சின்னம் பூங்காவில், செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர தின விழா நடந்தது. ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் அலெக்ஸ் சந்திரன் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில், சுதந்திர தின விழா நடந்தது. திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேளம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதேபோல், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. முதியவர் தர்ணா போராட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அமுதம் காலனியைச் சேர்ந்தவர் வரதராஜன், 55. இவர், தன் பகுதியில் சாலை வசதி, குடிநீர் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைத்துக் கொடுப்பதாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால், எந்த பணிகளும் செய்யவில்லை எனக் கூறி, செங்கல்பட்டில் நடந்த சுதந்திர தின விழா மேடை அருகில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.
13-Aug-2025