உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் ரூ.2.40 கோடியில் நலத்திட்ட உதவி

செங்கை மாவட்டத்தில் ரூ.2.40 கோடியில் நலத்திட்ட உதவி

திருப்போரூர்,:திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டம், மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை கூட்டரங்கில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 379 பயனாளிகளுக்கு 2.40 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலமைச்சரின் தொழில் முனைவோர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 379 நபர்களுக்கு, 2 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி