கழிப்பறைகளை சீரமைப்பது எப்போது?
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில் மீன் மார்க்கெட், கண்ணகப்பட்டு நீதிமன்றம், திருவஞ்சாவடி தெரு, மாணவியர் விடுதி ஆகிய இடங்களில், பேரூராட்சியின் கழிப்பறைகள் உள்ளன.இவை பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல், மூடி வைக்கப்பட்டு உள்ளன.கழிப்பறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருக்கும் குழாய்கள், கழிப்பறை உபகரணங்களும் உடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் கழிப்பறை வசதியின்றி தவிக்கின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.