உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணைக்கட்டு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?

அணைக்கட்டு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?

பவுஞ்சூர், அணைக்கட்டு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பவுஞ்சூர் அருகே அணைக்கட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அணைக்கட்டு பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால் செம்பூர், தண்டரை, அணைக்கட்டு, கொஞ்சிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள், தங்களது குடும்ப விழாக்களான நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி பவுஞ்சூர், கூவத்துார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள், சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது வரை சமுதாய நலக்கூடம் அமைக்கப் படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் தனியார் மண்டபங்களில் அதிக பணம் செலுத்தி, சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அணைக்கட்டு பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி