உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் வெளியேற வடிகால் அமைக்கப்படுமா?

கழிவுநீர் வெளியேற வடிகால் அமைக்கப்படுமா?

கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணை புதுச்சேரி ஊராட்சி, நெல்லிக்குப்பம் சாலை அருகே உள்ள தில்ஷாத் நகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வரப்பிரதா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேற, வடிகால் வசதி இல்லை. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் வெளியேற வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தி.கமலா, காரணை புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ