உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூயிலுப்பையில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா?

பூயிலுப்பையில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா?

திருப்போரூர்;பூயிலுப்பை கிராமத்தில், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், ஒரே ஒரு மின்மாற்றியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீடுகள், 10க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் இப்பகுதியில் வீடுகள் அதிகரித்து வரும் நிலையில், போதிய அளவு மின்சாரம் கிடைக்காமல், இப்பகுதியில் குறைந்த, உயர் மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாக்கமின்றி தவிக்கின்றனர். எனவே, பூயிலுப்பை கிராமத்தில் சீரான மின்சாரம் வழங்க, கூடுதலாக புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை