உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டலத்தில் மழைநீர் தேக்கம் தரைப்பாலம் அமைக்கப்படுமா?

தண்டலத்தில் மழைநீர் தேக்கம் தரைப்பாலம் அமைக்கப்படுமா?

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தண்டலம் பகுதியில் மழைநீர் தேங்குவதால், பெரிய அளவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர்- அடுத்த தண்டலத்தில் உள்ள, 'பெட்ரோல் பங்க்' அருகே சிறுபாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வெளியேறுகிறது. இந்த சிறுபாலம் குறுகியதாக உள்ளதால், மழைக்காலத்தில் அதிகமான மழைநீர் வெளியேறும் போது, சிக்கல் ஏற்படுகிறது. அந்த வகையில், நேற்று பெய்த மழைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்த போது, இந்த சிறுபாலம் வழியாக விரைவாக வெளியேற முடியாமல், சாலை முழுதும் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தடுமாற்றத்துடன் பயணித்தனர். எனவே, தண்டலம் பகுதியில் பெரிய அளவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை