அம்பேத்கர் தெரு சாலைகள் புதிதாக அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு ஊராட்சியில், 6 வார்டுகளில், 1,600 நபர்கள் வசிக்கின்றனர்.இதில், 300 நபர்கள் வசிக்கும் 5வது வார்டு, அம்பேத்கர் தெரு சாலைகள் மிக மோசமாக, நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளன.இந்த நகரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலைகள் அமைக்கப்பட்டு, அதன் பின் புனரமைக்கப்படவே இல்லை.சாலைகளை புதிதாக அமைத்து தரும்படி, கடந்த 4 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், தீர்மானம் இயற்றியும் எந்த நடவடிக்கையும் இல்லை.தவிர, முதல்வரின் தனி பிரிவுக்கு மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, அம்பேத்கர் தெரு சாலைகளை புதிதாக அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சிரஞ்சீவி, தொழுப்பேடு.