உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அனைத்து மகளிர் காவல் நிலையம்: பள்ளிக்கரணையில் அமைக்கப்படுமா?

 அனைத்து மகளிர் காவல் நிலையம்: பள்ளிக்கரணையில் அமைக்கப்படுமா?

பள்ளிக்கரணை:சென்னை பள்ளிக்கரணையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சிக்கான காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டு, தாம்பரம் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில், பள்ளிக்கரணை காவல் நிலையம் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் ஒன்பது காவல் நிலையங்கள் உள்ளன. இதில், பள்ளிக்கரணையை சுற்றியுள்ள மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், இங்கு பெண்கள், சிறுமியருக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள், புகார்கள் மற்றும் குடும்ப நல வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க, மகளிர் காவல் நிலையங்களே இல்லை. இதுபோன்ற புகார் அளிக்க, சிட்லப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள் மற்றும் வழக்குகளில் கணிசமானவை, பாதிப்புக்குள்ளான பெண்கள் கொண்டு வரும் குடும்ப பிரச்னைகள் தான். மகளிர் காவல் நிலையம் என்றால், துணிச்சலாக அணுகி, தங்களது பிரச்னைகளை தைரியமாகவும், வெளிப்படையாகவும் பெண்களால் கூற முடியும். எனவே, மக்கள் தொகையை கவனத்தில் கொண்டு, போதுமான பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளை நியமித்து, பள்ளிக்கரணையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ