உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரியனுார் சாலை அகலப்படுத்தப்படுமா?

அரியனுார் சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யூர்:பவுஞ்சூரில் இருந்து அரியனுார் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.செய்யூர் அருகே விழுதமங்கலம் சாலை சந்திப்பில் இருந்து அரியனுார் செல்லும் 5 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.நெசப்பாக்கம், வெண்மணி, கல்பட்டு, வெளிக்காடு, அரியனுார் ஆகிய கிராம மக்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் செயல்படுவதால், அதிக அளவில் லாரிகள் ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்கின்றன.இங்கு தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது, நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுகிறது.வளைவுப் பகுதிகளில், வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அரியனுார் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி