பெண்கள் பள்ளி எதிரே சிசிடிவி அமைக்கப்படுமா?
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் எதிரே, கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டுமென, மாணவியரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அச்சிறுபாக்கம் மார்வார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் நுழைவாயில் எதிரே, மாணவியரின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.கடந்த சில மாதங்களாக, இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து 'ஒயர்'கள் அறுந்து, காட்சிப்பொருளாக இருந்தது.இதையடுத்து, அந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் புதிதாக அமைக்கப்படவில்லை.இதனால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 'ரோமியோ'க்கள் சிலர், காலை மற்றும் மாலை வேளைகளில், விலை உயர்ந்த, அதிக சத்தம் எழுப்பக்கூடிய 'பைக்'குகளில் சாகசம் செய்து வருகின்றனர்.எனவே, பள்ளி மாணவியரின் பாதுகாப்பு கருதி, அச்சிறுபாக்கம் போலீசார் இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, மாணவியரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.