உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுமா?

அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுமா?

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவை உள்ளன.இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.மானாமதி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் செங்கல்பட்டு, திருப்போரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, பணி நிமித்தமாக தினமும் சென்று வருகின்றனர்.இங்கிருந்து அடையாறு, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற முக்கிய பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளும் இயங்குகின்றன.இந்நிலையில், சில தட பேருந்துகள் முறையாக இயக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பகுதிவாசிகள் மேலும் கூறியதாவது:செங்கல்பட்டு பனிமனை இயங்கும் செங்கல்பட்டு -மானாமதி தடம் எண் 75 பேருந்து மற்றும் முள்ளிப்பாக்கம், மானாமதி வழியாக செங்கல்பட்டு - திருப்போரூர் தடம் எண் '50எஸ்' ஆகிய இரு தடம் எண் பேருந்துகள், பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முற்றிலும் இயங்குவது கிடையாது. இதில், தடம் எண் '50எஸ்' பேருந்து, வழக்கமான நேரத்தில் சரிவர வருவது கிடையாது. மேற்கண்ட பேருந்துகள் முறையாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி