உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பு கால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆக்கிரமிப்பு கால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பிரம்ம தீர்த்த குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவில் அருகில், சதுரங்கப்பட்டினம் சாலையை ஒட்டி, லட்சுமி தீர்த்தம் எனும் பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தை நீண்ட காலமாக பராமரிக்காததால், நான்கு புறமும் ஆக்கிரமிப்பில் சிக்கி, மீதமுள்ள இடத்தில் செடிகள் வளர்ந்து மூடியுள்ளன. இந்த குளத்திற்கு மழைநீர் செல்லும் வகையில், வேதகிரீஸ்வரர் கோவில் மலையடிவாரம் பகுதியிலிருந்து, ஒரு வாய்க்கால் இருந்தது. மேலும், செல்லியம்மன் கோவில் தெருவிலிருந்து, சன்னிதி தெரு வழியாக மழைநீர் செல்லும் மற்றொரு கால்வாய் இருந்தது. இந்த வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாளர்களால் துார்க்கப்பட்டுள்ளன. வாய்க்கால் இருந்தால் மட்டுமே, பெருக்கெடுக்கும் மழைநீர் குளத்தில் சென்று சேரும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் கால்வாய்களை மீட்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி