உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுபாலத்தில் அடைப்புகள் துார்வாரி சீரமைக்கப்படுமா?

சிறுபாலத்தில் அடைப்புகள் துார்வாரி சீரமைக்கப்படுமா?

செங்கல்பட்டு : -நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேலமையூர் ஏரியில் இருந்து, பாசன கால்வாய், ரயில்வே தண்டவாளம் அருகில் செல்கிறது. இப்பகுதியில், ரயில்வே நிர்வாகம் சிறுபாலம் அமைத்து, தண்ணீர் வெளியேற்றியது. பல ஆண்டுகளாக, சிறுபாலத்தில் உள்ள அடைப்புகளை துார்வாரி சீரமைக்காததால், பாசன கால்வாயில் செல்ல வழியின்றி, மழைக்காலங்களில் அண்ணா நகர் வசிப்பிடம் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க, பாசன கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் நேரடியாக பார்வையிட்டு, கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நீர்வளம், ரயில்வே துறைகளுக்கு உத்தரவிட்டார்.இந்த உத்தரவையடுத்து, நீர்வளத்துறையினர் கால்வாயை துார்வாரி சீரமைத்தனர். ஆனால், ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள சிறுபாலப் பகுதி துார்வாரப்படவில்லை.அதனால், அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன், சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை துார்வாரி சீரமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை