உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆர்.ஐ., அலுவலகத்திற்கு கட்டிய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

ஆர்.ஐ., அலுவலகத்திற்கு கட்டிய கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகா, சிங்கபெருமாள் கோவில் குறுவட்டத்தில், சிங்கபெருமாள்கோவில், விஞ்சியம்பாக்கம், திருத்தேரி, பாரேரி, திருக்கச்சூர், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம், செங்குன்றம், சித்தமனுார், கீழக்கரணை ஆகிய கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களுக்கு, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி இ - சேவை மைய கட்டடத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.வாரிசு, ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு கிராமவாசிகள் வந்து செல்கின்றனர்.இந்த அலுவலகத்தில், இட நெருக்கடியில் ஊழியர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின், திருக்கச்சூர் கிராமத்தில், வருவாய் அலுவலர் அலுவலகம் கட்ட, எட்டு சென்ட் நிலம் ஒதுக்கி, வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தனர்.அதன்பின், கடந்த மார்ச் மாதம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் பணிகளை துவக்கி, அலுவலக கட்டடத்தை கட்டி முடித்தனர். இந்த கட்டடம், தற்போது வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கடந்த பத்து மாதங்களாக வருவாய் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட புதிய கட்டடம், திறக்கப்படாமல் மூட்டியே கிடக்கிறது.இந்த கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி