திருக்கழுக்குன்றம் மருத்துவமனையில் பாழடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், அரசு மருத்துவமனை இயங்குகிறது. திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர், மருத்துவமனை வளாகத்தில் தங்குவதற்காக, நீண்டகாலத்திற்கு முன் குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டது.துவக்க காலத்தில் அக்கட்டடம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்டடம் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து சீரழிந்துள்ளது.கட்டடத்தை புதர் சூழ்ந்துள்ளது. விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி, சிகிச்சை பெறுவோர் அச்சப்படுகின்றனர். குறுகிய இடத்தில் செயல்படுவதால், இக்கட்டடம் இடையூறாகவும் உள்ளது.தற்போது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் நிலையில், நோயாளிகள், உடன் வருவோர் ஆகியோர் இளைப்பாற, பாழடைந்த கட்டடங்களை இடித்து, பூங்கா வளாகம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.