உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடலுார் ஏரிக்கரை சாலையில் கனரக வாகனத்திற்கு தடை வருமா?

கூடலுார் ஏரிக்கரை சாலையில் கனரக வாகனத்திற்கு தடை வருமா?

மறைமலைநகர்,கூடலுார் -- கோவிந்தாபுரம் சாலை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை கருநிலம், கோவிந்தாபுரம், மருதேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.சமீப காலமாக இந்த தடத்தில், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வேகமாக சென்று வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:கூடலுார் ஏரிக்கரை சாலை 15 அடி உயரம் உடையது.இதில் ஒருபுறம் ஏரியும் மற்றொரு பக்கம் அடர்ந்த புதரும் உள்ளன. மேலும், மூன்று முக்கிய வளைவுகள் உள்ளன. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலை, கடந்த ஆண்டு புதிதாக அமைக்கப்பட்டது.அதில் இருந்து பள்ளி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த வாகனங்கள் அனைத்தும், அதிவேகத்தில் சென்று வருவதால், கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, கடந்த காலங்களில் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சாலையின் நுழைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது போல, மீண்டும் தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ