உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளியில் இரும்பு கேட் அமையுமா?

அரசு பள்ளியில் இரும்பு கேட் அமையுமா?

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே கொடூர் கிராமத்தில். திரவுபதி அம்மன் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு, 1 முதல் 5ம் வகுப்பு வரை 52 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் இல்லாததால், பகல் நேரத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வலம் வருகிறது. மேலும், இரவு நேரங்களில் மர்மநபர்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ