உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ்சிலிருந்து விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பஸ்சிலிருந்து விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுராந்தகம், அச்சிறுபாக்கம் அடுத்த செம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி சிவகாமி, 46.இவர், மாமண்டூர் பகுதியிலுள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்தார்.நேற்று, வழக்கம் போல், மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் தடம் எண் '81ஜி' அரசு பேருந்தில் பயணித்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் அருகே பேருந்து சென்ற போது, சிவகாமி பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அது நிறுத்தம் இல்லாததால், பேருந்து கடந்து சென்றுள்ளது. அப்போது சிவகாமி, பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறிக்கொண்டே, பேருந்து படியின் அருகே இறங்க தயாராக வந்துள்ளார்.அப்போது ஓட்டுநர், பேருந்தை நிறுத்த வேகத்தை கட்டுப்படுத்திய போது, அவசரமாக படியிலிருந்து இறங்கிய சிவகாமி, தவறி கீழே விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று, மருத்துவமனையில் உயிரிழந்தார்.படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை