உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 40, என்பவரது மனைவி மாந்தி தேவி, 37. நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மாந்தி தேவி, வீட்டில் உள்ள 'எமர்ஜன்சி லைட்'டிற்கு 'சார்ஜ்' போட்டுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார். இதை அறிந்த பிரேம்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், படூர் தனியார் மருத்துவமனையில் மாந்தி தேவியை சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், மாந்தி தேவி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ