உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக்கில் சென்ற பெண்ணிடம் கைப்பை பறிப்பு

பைக்கில் சென்ற பெண்ணிடம் கைப்பை பறிப்பு

பெருங்களத்துார்:பீர்க்கன்காரணையில், 'பைக்'கில் சென்ற பெண்ணிடம் கைப்பை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். படப்பை, சாலமங்கலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 26. இவர், நேற்று முன்தினம் இரவு, படப்பையில் இருந்து பைக் டாக்ஸியான 'ரேபிடோ'வை புக் செய்தார். படப்பையைச் சேர்ந்த விஸ்வேஸ்வர், 25, என்பவரது ரேபிடோ பைக்கில், படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்றுள்ளார். வழியில், பீர்க்கன்காரணை, ஏரிக்கரை பேருந்து நிறுத்த சிக்னலில் நின்றுள்ளனர். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், விஜயலட்சுமியின் கைப்பையை பறித்து, மின்னல் வேகத்தில் பறந்தனர். அந்த பையில், 6,000 ரூபாய் மற்றும் பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ