மேலும் செய்திகள்
காவிரியில் கரை ஒதுங்கிய முதியவர் சடலம் மீட்பு
14-Oct-2025
செய்யூர்: பனையூர் சின்னகுப்பம் கடற்கரை ஓரத்தில், அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கரை ஒதுங்கியது குறித்து, செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் சின்ன குப்பம் மீனவ கிராமம் கடற்கரையில், இறந்து மூன்று நாட்களுக்கும் மேலான, 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல், நேற்று காலை கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், செய்யூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் தோல் உரிந்த, சற்று உருக்குலைந்த நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனையூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த பெண் யார், கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து கடலில் வீசினரா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14-Oct-2025