உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதர் மூடிய சுகாதார வளாகம் சீரமைக்காததால் பெண்கள் அவதி

புதர் மூடிய சுகாதார வளாகம் சீரமைக்காததால் பெண்கள் அவதி

செய்யூர்:செய்யூர் அடுத்த நல்லுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையம் அருகே, மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.அப்பகுதி பெண்கள் குளிப்பதற்கும், துணி துவைக்கவும், இயற்கை உபாதைகள் கழிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாமல் நாளடைவில், இந்த சுகாதார வளாகம் சேதமடைந்ததால், அப்பகுதி பெண்கள் சுகாதார வளாகத்தை தவிர்த்து வந்தனர்.இதனால் தற்போது, சுகாதார வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ