உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அறக்கட்டளை நில சுற்றுச்சுவரில் கிரில் அமைக்கும் பணி துவக்கம்

அறக்கட்டளை நில சுற்றுச்சுவரில் கிரில் அமைக்கும் பணி துவக்கம்

மாமல்லபுரம்:ஆளவந்தார் அறக்கட்டளை நிலம் சுற்றுச்சுவரில், கம்பி தடுப்பு அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,054 ஏக்கர் நிலம் மாமல்லபுரம், பட்டிபுலம், சாலவான்குப்பம், கிருஷ்ணன்காரணை, நெம்மேலி உள்ளிட்ட இடங்களில் உள்ளது. சாலவான்குப்பம் முதல் வடநெம்மேலி வரை, 10 கி.மீ., துாரத்திற்கு, கிழக்கு கடற்கரை சாலை - கடற்கரை இடையே, இந்நிலம் பரந்த நிலபரப்பாக உள்ளது.இந்நிலத்தில் நீண்ட காலமாக, சவுக்கு பயிரிடப்பட்டது. திறந்தவெளி பகுதியாக இருந்த நிலையில், காதலர்கள் சவுக்குத்தோப்பில் புகலிடம் தேடினர்.இதனால், பல கொலைகள் நடந்துள்ளன. இச்சூழலில், அறக்கட்டளை நிர்வாகம், 10 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்ட முடிவெடுத்து, 2022ல் பணிகளை துவக்கியது.நிலத்தடியில் 3.5 அடி உயர அடித்தள கருங்கல் கடக்கால், அதன் மேல் 3 அடி உயர கருங்கல் சுவர், சுவரின் மேல் நான்கடி உயர 'கிரில் கம்பி' என, இச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.அரசு காகித ஆலைக்காக சவுக்கு வெட்டப்பட்டு, இப்பணி நடக்கிறது. சுவர் கட்டப்பட்டுள்ள சாலவான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 'கிரில்' எனும் கம்பி தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ