மேலும் செய்திகள்
மாமல்லை - புதுச்சேரி சாலை சீரமைப்பு
20-Dec-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், புதுச்சேரி மேம்பாலங்கள் இணைப்பு மற்றும் 'சர்வீஸ்' ஆகிய சாலைப் பணிகள், மும்முரமாக நடக்கிறது.மாமல்லபுரம் - புதுச்சேரி, தேசிய நெடுஞ்சாலையை, நான்குவழியாக மேம்படுத்தும் பணிகள், கடந்த 2023 ஜூன் மாதம் துவக்கப்பட்டது. இத்தடத்தில், முதல் பிரிவாக, மாமல்லபுரம் - முகையூர், 32 கி.மீ.,க்கு மேம்பாட்டுப் பணி நடக்கிறது. இத்தடத்தில், பிற சாலைகள் குறுக்கிடும் இடங்களில் மேம்பாலங்கள், சிறிய பெட்டி பாலங்கள், வாய்க்கால் குறுக்கிடும் இடங்களில் சிறிய பாலங்கள் ஆகியவை கட்டி, சாலை அமைக்கப்படுகிறது.மாமல்லபுரம் பகுதியில், புறவழி துவங்குமிடம், பூஞ்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில், தொலைதுார வாகனங்கள், இடையூறின்றி நேரடியாக கடக்க கருதி, மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல மாதங்களுக்கு முன், அவற்றை கட்டி முடித்தும், ஏரி மண் கிடைக்காததால், இணைப்புச் சாலை அமைப்பது தாமதமானது. பருவமழைக்காலம் துவங்கும் முன், ஏரிகளில் கிராவல் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. ஒப்பந்த நிறுவனம் மண் எடுத்து, பாலங்களை ஒட்டி குவித்தது.பாலத்தை இணைக்கும் சாலை சாலை அமைக்கும் முன், பாலங்களை ஒட்டி வாகனங்கள் கடக்க, சர்வீஸ் சாலைகளையும் அமைக்கிறது. இப்பணிகள் முடித்து, மேம்பால உயரத்திற்கு, கீழிருந்து உயரும் இணைப்புச் சாலை அமைக்க, ஏற்கனவே குவித்த மண்ணை பரப்பி பணிகளை துவக்கி, மும்முரமாக நடக்கிறது.சர்வீஸ் சாலைகளை விரைவில் பயன்பாட்டிற்கு துவக்கி, மேம்பால இணைப்பு சாலைப் பணிகளை தீவிரப்படுத்தி, பாலங்களை பயன்பாட்டிற்கு துவக்கவுள்ளதாக, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
20-Dec-2024